பூத்திடும் அவனும் காத்திடு பவனும் புள்விலங் குருக்கொடு நேடி ஏத்திடும் முடியும் கூத்திடும் அடியும் இன்னமும் காண்கிலர் என்றும் கோத்திடும் அடியர் மாலையின் அளவில் குலவினை என்றுநல் லோர்கள் சாற்றிடும் அதுகேட் டுவந்தனன் நினது சந்நிதி உறஎனக் கருளே