பூப்பினும் பலகால் மடந்தையர் தமைப்போய்ப் புணர்ந்தவெம் புலையனேன் விடஞ்சார் பாப்பினுங் கொடியர் உறவையே விழைந்த பள்ளனேன் கள்ளனேன் நெருக்கும் ஆப்பினும் வலியேன் அறத்தொழில் புரியேன் அன்பினால் அடுத்தவர் கரங்கள் கூப்பினுங் கூப்பாக் கொடுங்கையேன் எனினும் கோபியேல் காத்தருள் எனையே