பூரணிசிற் போதைசிவ போகிசிவ யோகி பூவையர்கள் நாயகிஐம் பூதமுந்தா னானாள் தேரணியும் நெடுவீதித் தில்லைநக ருடையாள் சிவகாம வல்லிபெருந் தேவிஉளங் களிப்ப ஏரணியும் மணிமன்றில் இன்பவடி வாகி இன்பநடம் புரிகின்ற எம்முடைய துரையே தாரணியில் உனைப்பாடுந் தரத்தைஅடைந் தனன்என் தன்மையெலாம் நன்மைஎனச் சம்மதித்த வாறே