பூவாய் மலர்க்குழல் பூவாய்மெய் அன்பர் புனைந்ததமிழ்ப் பாவாய் நிறைந்தபொற் பாவாய்செந் தேனிற் பகர்மொழியாய் காவாய் எனஅயன் காவாய் பவனும் கருதுமலர் மாவாய் எழில்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே
பூவாய் வாட்கண் மகளேநீ புரிந்த தவந்தான் எத்தவமோ சேவாய் விடங்கப் பெருமானார் திருமால் அறியாச் சேவடியார் காவாய்ந் தோங்கும் திருஒற்றிக் காவல் உடையார் எவ்வௌர்க்கும் கோவாய் நின்றார் அவர்தம்மைக் கூடி உடலம் குளிர்ந்தனையே