பூவார் கொன்றைச் செஞ்சடை யாளர் புகழாளர் ஈவார் போல்வந் தென்மனை புக்கார் எழில்காட்டி தேவார் தில்லைச் சிற்சபை மேவும் திருவாளர் ஆவா என்றார் என்னடி அம்மா அவர்சூதே எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்