பூவுக் கரையரும்வான் புங்கவரும் போற்றுதிரு நாவுக் கரையரெனு நன்னாம - மேவுற்ற தொண்டர்க்கு நீகட்டுச் சோறெடுத்தாய் என்றறிந்தோ தொண்டர்க்குத் தொண்டனென்பார் சொல்