பூவே மணமே சரணம் சரணம் பொருளே அருளே சரணம் சரணம் கோவே குகனே சரணம் சரணம் குருவே திருவே சரணம் சரணம் தேவே தெளிவே சரணம் சரணம் சிவசண் முகனே சரணம் சரணம் காவேர் தருவே சரணம் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம்