பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்று புண்ணே எனும்இப் புலைஉடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத் தண்ணேர் மதியின் அமுதளித்துச் சாகா வரந்தந் தாட்கொண்ட கண்ணே மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே