பெண்மணியே என்றுலகில் பேதையரைப் பேசாதென் கண்மணியே கற்பகமே கண்ணுதலில் கொள்கரும்பே ஒண்மணியே தேனேஎன் றொற்றிஅப்பா உன்தனைநான் பண்மணஞ்செய் பாட்டில் பரவித் துதியேனோ