பெண்மையே விழைந்தேன் அவர்மனம் அறியேன் பேய்எனப் பிடித்தனன் மடவார்க் குண்மையே புகல்வான் போன்றவர் தமைத்தொட் டுவந்தகங் களித்தபொய் யுளத்தேன் தண்மையே அறியேன் வெம்மையே உடையேன் சாத்திரம் புகன்றுவாய் தடித்தேன் நண்மையே அடையேன் என்னினும் உனையே நம்பினேன் கைவிடேல் எனையே