பெரியஎனப் புகல்கின்ற பூதவகை எல்லாம் பேசுகின்ற பகுதியிலே வீசுகின்ற சிறுமை உரியபெரும் பகுதியும்அப் பகுதிமுதல் குடிலை உளங்கொள்பரை முதல்சத்தி யோகமெலாம் பொதுவில் துரியநடம் புரிகின்ற சோதிமலர்த் தாளில் தோன்றியதோர் சிற்றசைவால் தோன்றுகின்ற என்றால் அரியபெரும் பொருளாக நடிக்கின்ற தலைவர் அருட்பெருமை என்அளவோ அறியாய் என்தோழி