பெரியன்அருட் பெருஞ்சோதிப் பெருங்கருணைப் பெருமான் பெரும்புகழைப் பேசுதலே பெரும்பேறென் றுணர்ந்தே துரியநிலத் தவர்எல்லாம் துதிக்கின்றார் ஏழை துதித்தல்பெரி தலஇங்கே துதித்திடஎன் றெழுந்த அரியபெரும் பேராசைக் கடல்பெரிதே அதுஎன் அளவுகடந் திழுக்கின்ற தாதலினால் விரைந்தே உரியஅருள் அமுதளித்தே நினைத்துதிப்பித் தருள்வாய் உலகமெலாம் களித்தோங்க ஓங்குநடத் தரசே