பெருகுமா கருணைப் பெருங்கடல் இன்பப் பெருக்கமே என்பெரும் பேறே உருகும்ஓர் உள்ளத் துவட்டுறா தினிக்கும் உண்மைவான் அமுதமே என்பால் கருகும்நெஞ் சதனைத் தளிர்த்திடப் புரிந்த கருணையங் கடவுளே விரைந்து வருகஎன் றுரைத்தேன் வந்தருட் சோதி வழங்கினை வாழிநின் மாண்பே