பெருங்கருணைக் கடலேஎன் குருவே முக்கண் பெருமானே நினைப்புகழேன் பேயேன் அந்தோ கருங்கல்மனக் குரங்காட்டி வாளா நாளைக் கழிக்கின்றேன் பயன்அறியாக் கடைய னேனை ஒருங்குருள உடல்பதைப்ப உறுங்குன் றேற்றி உருட்டுகினும் உயிர்நடுங்க உள்ளம் ஏங்க இருங்கழுவில் ஏற்றுகினும் அன்றி இன்னும் என்செயினும் போதாதே எந்தாய் எந்தாய்