பெருங்களப முலைமடவார் என்னும் பொல்லாப் பேய்க்கோட்பட் டாடுகின்ற பித்த னேனுக் கிரும்புலவர்க் கரியதிரு அருள்ஈ வாயேல் என்சொலார் அடியர்அதற் கெந்தாய் எந்நாய் கரும்பின்இழிந் தொழுகும்அருள் சுவையே முக்கண் கனிகனிந்த தேனேஎன் கண்ணே ஞானம் தரும்புனிதர் புகழ்தணிகை மணியே ஜீவ சாட்சியாய் நிறைந்தருளும் சகச வாழ்வே சொல்வர் தொவே முதற்பதிப்பு