பெருந்தா ரணியோர் புகழொற்றிப் பெருமா னிவர்தம் முகநோக்கி யருந்தா வமுத மனையீரிங் கடுத்த பரிசே தறையுமென்றேன் வருந்தா திங்கே யருந்தமுத மனையா ளாக வாழ்வினொடு மிருந்தா யடைந்தே மென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ