பெருமநின் அருளே அன்றிஇவ் வுலகில் பேதையர் புழுமலப் பிலமாம் கருமாழ் வெனைத்தும் வேண்டிலேன் மற்றைக் கடவுளர் வாழ்வையும் விரும்பேன் தருமவா ரிதியே தடப்ணை ஒற்றித் தலத்தமர் தனிமுதல் பொருளே துருமவான் அமுதே அடியனேன் தன்னைச் சோதியா தருள்வதுன் பரமே