பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான் பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி ஒருஞானத் திருவமுதுண் டோ ங்குகின்றேன் இனிநின் உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன் அருளாய ஸோதிஎனக் குபகரிக்கின் றதுநீ அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே