Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :143
பெருமை வேண்டிய பேதையில் பேதையேன் பெருந்துயர் உழக்கின்றேன்
ஒருமை ஈயும்நின் திருப்பதம் இறைஞ்சிலேன் உய்வதெப் படியேயோ
அருமை யாம்தவத் தம்மையும் அப்பனும் அளித்திடும் பெருவாழ்வே
தரும வள்ளலே குணப்பெருங் குன்றமே தணிகைமா மலையானே
பாடல் எண் :211
பெருமை நிதியே மால்விடைகொள் பெம்மான் வருந்திப் பெறும்பேறே
அருமை மணியே தணிகைமலை அமுதே உன்றன் ஆறெழுத்தை
ஒருமை மனத்தின் உச்சரித்திங் குயர்ந்த திருவெண் ணீறிட்டால்
இருமை வளனும் எய்தும்இடர் என்ப தொன்றும் எய்தாதே
பாடல் எண் :1697
பெருமை உடையார் மனைதொறும்போய்ப் பிச்சை எடுத்தார் ஆனாலும் 
அருமை மணியார் அம்பலத்தில் ஆடித் திரிந்தார் ஆனாலும் 
ஒருமை உடையார் கோவணமே உடையாய் உடுத்தார் ஆனாலும் 
கருமை விழியாய் நான்அவர்மேல் காதல் ஒழியேன் கனவினுமே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.