பெருமையில் பிறங்கும் பெரியநற் குணத்தோர் பெற்றதோர் பெருந்தனிப் பொருளே அருமையில் பிரமன் ஆகிய தேவர் அடைந்தநற் செல்வமே அமுதே இருமையிற் பயனும் நின்திரு அருளே என்றுநின் அடைக்கலம் ஆனேன் கருமையிற் பொலியும் விடநிகர் துன்பக் களைகளைந் தெனைவிளைத் தருனே