பெரும்பேதை யேன்சிறு வாழ்க்கைத் துயர்எனும் பேரலையில் துரும்பே எனஅலை கின்றேன் புணைநின் துணைப்பதமே கரும்பே கருணைக் கடலே அருண்முக் கனிநறவே வரும்பேர் அருள்ஒற்றி வாழ்வே வடிவுடை மாணிக்கமே