பெறுவது நுமைஅன்றிப் பிறிதொன்றும் விரும்பேன் பேசல்நும் பேச்சன்றிப் பிறிதொன்றும் பேசேன் உறுவதுநும் அருள்அன்றிப் பிரிதொன்றும் உவவேன் உன்னல்உம் திறன்அன்றிப் பிரிதொன்றும் உன்னேன் மறுநெறி தீர்த்தெனை வாழ்வித்துக் கொண்டீர் வள்ளலே நும்திரு வரவுகண் டல்லால் அறுசுவை உண்டிகொண் டருந்தவும் மாட்டேன் அருட்பெருஞ் சோதியீர் ஆணைநும் மீதே