பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம் பெற்றவர் அறிவரே அல்லால் மற்றவர் அறியார் என்றனை ஈன்ற வள்ளலே மன்றிலே நடிக்கும் கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான் குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள் முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ முனிவதென் முனிவுதீர்ந் தருளே