பெற்றம் இவரும் பெருமானார் பிரமன் அறியாப் பேர்ஒளியாய் உற்ற சிவனார் திருஒற்றி யூர்வாழ் வுடையார் உற்றிலரே எற்றென் றுரைப்பேன் செவிலிஅவள் ஏறா மட்டும் ஏறுகின்றாள் செற்றம் ஒழியாள் என்னடிநான் செய்வ தொன்றும் தெரிந்திலனே