பெற்றி அறியாப் பிரமனுக்கும் பெரிய மாற்கும் பெறஅறியார் புற்றின் அரவார் கச்சைஉடைப் புனிதர் என்னைப் புணரும்இடம் தெற்றி மணிக்கால் விளங்குதில்லைச் சிற்றம் பலமோ அன்றிஇந்த ஒற்றி நகரோ சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே