பேசுதிரோ தாயிஎனும் பெண்மடவாய் இதுகேள் பின்முன்அறி யாதெனைநீ என்முன்மறைக் காதே வேசறமா மலஇரவு முழுதும்விடிந் ததுகாண் வீசும்அருட் பெருஞ்ஸோதி விளங்குகின்ற தறிநீ ஏசுறுநின் செயல்அனைத்தும் என்னளவில் நடவா திதைஅறிந்து விரைந்தெனைவிட் டேகுகஇக் கணத்தே மாசறும்என் சரிதம்ஒன்றும் தெரிந்திலையோ எல்லாம் வல்லஒரு சித்தருக்கே நல்லபிள்ளை நானே