பேசும்ஓங் காரம் ஈறதாப் பேசாப் பெரியஓங் காரமே முதலா ஏசறும் அங்கம் உபாங்கம்வே றங்கம் என்றவற் றவண்அவண் இசைந்த மாசறு சத்தி சத்தர்ஆண் டமைத்து மன்அதி காரம்ஐந் தியற்றத் தேசுசெய் தணிபொன் னம்பலத் தாடும் என்பரால் திருவடி நிலையே