பேதநினை யாதுவிரைந் தாடவா ரீர் பின்பாட்டுக் காலையிதே ஆடவா ரீர் ஓதஉல வாதவரே ஆடவா ரீர் உள்ளாசை பொங்குகின்ற தாடவா ரீர் சாதல்அறுத் தெனைஆண்டீர் ஆடவா ரீர் தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர் ஏதமறுத் தவர்க்கினியீர் ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்