பேதைநெஞ் சேஎன்றன் பின்போந் திடுதிஇப் பேயூலக வாதைஅஞ் சேல்பொறி வாய்க்கலங் கேல்இறை யூம்மயங்கேல் போதையெஞ் சேல்தணி காசலம் போய்அப் பொருப்பமர்ந்த தாதைஅஞ் சேவடிக் கீழ்க்குடி யாகத் தயங்குவமே திருச்சிற்றம்பலம் நாள் அவம்படாமை வேண்டல் எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் திருச்சிற்றம்பலம்