பேய னேன்இன்னும் எத்தனை நாள்செலும் பெருந்துயர்க் கடல்நீந்த மாய னேமுதல் வானவர் தமக்கருள் மணிமிடற் றிறையோர்க்குச் சேய னேஅகந் தெளிந்தவர்க் கினியனே செல்வனே எனைக்காக்குந் தாய னேஎன்றன் சற்குரு நாதனே தணிகைமா மலையானே திருச்சிற்றம்பலம் ஏத்தாப் பிறவி இழிவு எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்