பேயும் அஞ்சுறும் பேதை யார்களைப் பேணும் இப்பெரும் பேய னேற்கொரு தாயும் அப்பனும் தமரும் நட்பும்ஆய்த் தண்அ ருட்கடல் தந்த வள்ளலே நீயும் நானும்ஓர் பாலும் நீருமாய் நிற்க வேண்டினேன் நீதி ஆகுமோ சாயும் வன்பவம் தன்னை நீக்கிடும் சாமி யேதிருத் தணிகை நாதனே