பேரா ரொற்றி யீரும்மைப் பெற்றா ரெவரென் றேனவர்தம் ஏரார் பெயரின் முன்பினிரண் டிரண்ட கத்தா ரென்றாரென் நேரா வுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லாமென்றார் ஆரார் சடைய ரென்னடியவ் வையர் மொழிந்த வருண்மொழியே
பேரா ரொற்றி யீரும்மைப் பெற்றா ரெவரென் றேனவர்தம் மேரார் பெயரின் முன்பினிரண் டிரண்டா மெழுத்தா ரென்றாரென் னேரா யுரைப்பீ ரென்றேனீ நெஞ்ச நெகிழ்ந்தா லுரைப்பாமென் றேரா யுரைசெய் தருள்கின்றா ரிதுதான் சேடி யென்னேடீ