பேராய அண்டங்கள் பலவும் பிண்ட பேதங்கள் பற்பலவும் பிண்டாண் டத்தின் வாராய பலபொருளும் கடலும் மண்ணும் மலையுளவும் கடலுளவும் மணலும் வானும் ஊராத வான்மீனும் அணுவும் மற்றை உள்ளனவும் அளந்திடலாம் ஓகோ உன்னை ஆராலும் அளப்பரிதென் றனந்த வேதம் அறைந்திளைக்க அதிதூர மாகுந் தேவே