பைச்சூர் அரவப் படநடத் தான்அயன் பற்பலநாள் எய்ச்சூர் தவஞ்செய் யினும்கிடை யாப்பதம் ஏய்ந்துமண்மேல் வைச்சூரன் வன்தொண்டன் சந்தரன் என்னுநம் வள்ளலுக்குக் கச்சூரில் சோறிரந் தூட்டின ரால்எம் கடவுளரே