பைத்த அரவப் பணிஅணிவார் பணைசூழ் ஒற்றிப் பதிமகிழ்வார் மைத்த மிடற்றார் அவர்தமக்கு மாலை இடவே நான்உளத்தில் வைத்த கருத்து முடிந்திடுமோ வறிதே முடியா தழிந்திடுமோ உய்த்த மதியால் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே