பொங்கு மாயையின் புணர்ப்பினுக் குள்ளம் போக்கி நின்றதும் புலப்பகை வர்களால் இங்கு மால்அரி ஏற்றின்முன் கரிபோல் ஏங்கு கின்றதும் இடர்ப்பெருங் கடலில் தங்கும் ஆசையங் கராப்பிடித் தீர்க்கத் தவிப்பில் நின்றதும் தமியனேன் தனையும் எங்கும் ஆகிநின் றாய்அறிந் திலையோ என்செய் கேன்நர கிடைஇடும் போதே