பொதித்தரும் மங்கையர் புளகக் கொங்கைமேல் வதிதரும் நெஞ்சினேன் மதித்தி லேன்ஐயோ மதிதரும் அன்பர்தம் மனத்தில் எண்ணிய கதிதரும் தணிகைவாழ் கற்ப கத்தையே திருச்சிற்றம்பலம் குறை நேர்ந்த பத்து எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்