பொதுவில்நடிக் கின்றவரே அணையவா ரீர் பொற்புடைய புண்ணியரே அணையவா ரீர் மதுவில்இனிக் கின்றவரே அணையவா ரீர் மன்னியஎன் மன்னவரே அணையவா ரீர் விதுவின்அமு தானவரே அணையவா ரீர் மெய்யுரைத்த வித்தகரே அணையவா ரீர் இதுதருணம் இறையவரே அணையவா ரீர் என்னுடைய நாயகரே அணையவா ரீர் அணையவா ரீர்