பொதுவென்றும் பொதுவில்நடம் புரியா நின்ற பூரணசிற் சிவமென்றும் போதா னந்த மதுவென்றும் பிரமமென்றும் பரம மென்றும் வகுக்கின்றோர் வகுத்திடுக அதுதான் என்றும் இதுவென்றும் சுட்டவொணா ததனால் சும்மா இருப்பதுவே துணிவெனக்கொண் டிருக்கின் றோரை விதுவென்ற() தண்ணளியால் கலந்து கொண்டு விளங்குகின்ற பெருவெளியே விமலத் தேவே