பொத்தேர் மயலால் புழுங்குகின்ற பொய்யடியேன் கொத்தேர் செழுங்கொன்றைக் குன்றமே கோவாத முத்தே எவர்க்கும் முழுமுதலே முத்திக்கு வித்தேநின் பொன்னடிக்கீழ் மேவிநிற்க கண்டிலனே