பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன் பொங்கிய தாசைமேல் என்றாள் என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ என்னள வன்றுகாண் என்றாள் கொன்செயும் உலகர் என்னையும் உனது குறிப்பையும் குறித்திலார் என்றாள் வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள் வரத்தினால் நான்பெற்ற மகளே