பொன்நா யகனும் புரந்தரனும் பூவாழ் பவனும் புகழ்ந்தேத்த மின்னார் பொன்னம் பலநடுவே விளங்கும் கருணை விழிவழங்கும் அன்னார் அறிவா னந்தநடம் ஆடும் கழல்கண் டகங்குளிர்ந்தேன் என்நா யகனார் அவர்கழலை இன்னும் ஒருகால் காண்பேனோ