பொன்னஞ் சிலையால் புரம்எறித்தார் பொழில்சூழ் ஒற்றிப் புண்ணியனார் முன்நஞ் சருந்தும் முக்கணனார் மூவர் அறியா முதல்வர்அவர் இன்னஞ் சிலநாள் சென்றிடுமோ இலதேல் இன்று வருவாரோ உன்னஞ் சிறந்தீர் சோதிடம்பார்த் துரைப்பீர் புரிநூல் உத்தமரே