Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :1483
பொன்னுடை யார்அன்றிப் போற்றுநற் கல்விப் பொருளுடையார் 
என்னுடை யார்என ஏசுகின் றார்இஃ தென்னைஅன்னே 
மின்னுடை யாய்மின்னில் துன்னிடை யாய்ஒற்றி மேவுமுக்கண் 
மன்னுடை யாய்என் னுடையாய் வடிவுடை மாணிக்கமே
பாடல் எண் :2189
பொன்னுடை யார்தமைப் போய்அடுப் பாய்என்ற புன்மையினோர்க்
கென்னுடை யான்றனை யேஅடுப் பேன்இதற் கெள்ளளவும்
பின்னிடை யேன்அவர் முன்னடை யேன்எனப் பேசிவந்தேன்
மின்னிடை மாதுமை பாகாஎன் சோகம் விலக்குகவே

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.