பொன்னென் றொளிரும் புரிசடையார் புனைநூல் இடையார் புடைஉடையார் மன்னென் றுலகம் புகழ்ஒற்றி வாணர் பவனி வரக்கண்டேன் மின்னென் றிலங்கு மாதரெலாம் வேட்கை அடைய விளங்கிநின்ற(து) இன்னென் றறியேன் அவரழகை என்னென் றுரைப்ப தேந்திழையே