பொன்னைமதித் தையாநின் பொன்னடியைப் போற்றாத கன்னிகரும் நெஞ்சால் கலங்குகின்ற கைதவனேன் இன்னல் உழக்கின்ற ஏழைகட்கும் ஏழைகண்டாய் என்னை விடாதே எழுத்தறியும் பெருமானே