பொன்னையுற் றவனும் அயனும்நின் றறியாப் புண்ணியா கண்ணுதல் கரும்பே மன்னனே மருந்தே வளர்திரு முல்லை வாயில்வாழ் மாசிலா மணியே உன்னைநான் கனவின் இடத்தும்விட் டொழியேன் உன்திரு அடித்துணை அறிய என்னைஈன் றவனே முகமறி யார்போல் இருப்பதுன் திருவருட் கியல்போ திருச்சிற்றம்பலம் திருமுல்லைவாயில் திருவிண்ணப்பம் கலிவிருத்தம் திருசிற்றம்பலம்