பொன்பறியாப் புகல்வார்போல் மறைப்பதென்னை மடவாய் பூவையர்கா லையில்புணர நாணுவர்காண் என்றாய் அன்பறியாப் பெண்களுக்கே நின்உரைசம் மதமாம் ஆசைவெட்கம் அறியாதென் றறிந்திலையோ தோழி இன்பறியாய் ஆதலினால் இங்ஙனம்நீ இசைத்தாய் இறைவர்திரு வடிவதுகண் டிட்டதரு ணந்தான் துன்பறியாக் காலைஎன்றும் மாலைஎன்றும் ஒன்றும் தோன்றாது சுகம்ஒன்றே தோன்றுவதென் றறியே