பொன்பிணிக்கும் நெஞ்சப் புலையேனை இவ்வுலகில் வன்பிணிக்கோ பெற்று வளர்த்தாய் அறியேனே என்பிணைத்தார் வள்ளற் கினிமை பெறும்மணியே அன்பிணைத்தோர் போற்றும் அருட்டணிகை மன்னவனே