பொன்புனை புயனும் அயனும்மற் றவரும் புகலரும் பெரியஓர் நிலையில் இன்புரு வாகி அருளொடும் விளங்கி இயற்றலே ஆதிஐந் தொழிலும் தன்பொதுச் சமுகத் தைவர்கள் இயற்றத் தனிஅர சியற்றும்ஓர் தலைவன் அன்பெனும் குடிசை நுழைந்தன னானால் அவன்தனை மறுப்பவர் யாரே